ரஜினியை அடுத்து இயக்கப்போவது ஷங்கரா? கே.வி.ஆனந்தா? | rajini, ரஜினி

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (12/12/2013)

கடைசி தொடர்பு:17:53 (12/12/2013)

ரஜினியை அடுத்து இயக்கப்போவது ஷங்கரா? கே.வி.ஆனந்தா?

ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.

கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், அதற்கான பேச்சுவார்த்தைகள் கூட முடியவில்லையாம்.

ரஜினி 'எந்திரன்2' வில் நடிக்க ஆசைபப்டுவதாக சொல்கிறார்கள்.

ஈராஸ் நிறுவனத்துக்காக ஒரு புதிய படத்தில் நடிக்கவும் ரஜினி சம்மதித்து இருக்கிறாராம். அந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கப் போகிறாராம்.

 தற்போது ஷங்கர் 'ஐ' படத்திலும், கே.வி.ஆனந்த் 'அனேகன்' படத்திலும் பிஸியாக இருக்கிறார்கள்.

இந்தப் படங்கள் ரிலீஸ் ஆன பிறகுதான், ரஜினி யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தெரியவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close