'பிரியாணி'யில் அஜித்? | அஜித், பிரியாணி, ajith, biriyani

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (19/12/2013)

கடைசி தொடர்பு:18:42 (19/12/2013)

'பிரியாணி'யில் அஜித்?

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்த 'பிரியாணி' நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த தருணத்தில் வெங்கட்பிரபு ட்விட்டரில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்.

தல ரசிகர்களே! நாளைக்கு ரெடியா இருங்க. 'வீரம்' இசைக்காக மட்டுமில்லை. 'பிரியாணி'க்காகவும் என்று ட்வீட் செய்துள்ளார்.

தல பிரியாணி சமைத்து பாசமாகப் பரிமாறுவது தெரிந்த விஷயம். ஆனால், 'பிரியாணி' படத்தில் நட்பு நிமித்தமாக நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. இது குறித்து வெங்கட்பிரபு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ரசிகர்கள் வெங்கட்பிரபு குறித்து விமர்சனம் எழுப்பி,  உடனே ட்வீட் செய்ய ஆரம்பித்ததால், அவர்களை சமாதானப்படுத்தும் முனைப்பில் வெங்கட் தீவிரமாக இருந்தார்.

'பிரியாணி' கதை விஜய்க்காகத்தான் தயார் செய்தேன். தல - தளபதி இருவரும் நட்போடு இருக்கிறார்கள். நீங்கள் சண்டை போடாதீர்கள் என்று ட்விட்டரில் பதில் அளித்தார்.

ஆனால், 'பிரியாணி' படத்தில் அஜித் நடித்திருக்கிறாரா என்று வெங்கட் வெளிப்படையாக சொல்லவில்லை. படம் ரிலீஸ் ஆன பிறகுதான் உண்மை தெரியவரும்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close