ரஜினிக்குப் பதிலாக அஜித்? | அஜித், ajith

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (23/12/2013)

கடைசி தொடர்பு:12:04 (23/12/2013)

ரஜினிக்குப் பதிலாக அஜித்?

ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.

கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் , கே.எஸ். ரவிக்குமாரே, 'ரஜினிக்கு இப்போது படம் இயக்கவில்லை. இது வதந்தி' என்று சொல்லிவிட்டார்.

ஷங்கர், பி.வாசு, கே.வி. ஆனந்த் என்று பல பெயர்கள் அடிபட்டன.

அதில் இப்போது கே.வி.ஆனந்த் கழன்று கொண்டார். ரஜினிக்காகத் தயார் செய்த கதையை அஜித்திடம் சொல்லி ஓ.கே வாங்கிவிட்டாராம்.

ரஜினிக்குப் பதில் அஜித்தான் நடிக்கப் போகிறாராம் .

கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு, அஜித் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குள் கே.வி.ஆனந்த் 'அனேகன்' படத்தை முடித்து விடுவாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close