கமலுடன் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்குகிறாரா காஜல்? | காஜல், kajal

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (24/12/2013)

கடைசி தொடர்பு:16:10 (24/12/2013)

கமலுடன் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்குகிறாரா காஜல்?

திருப்பது பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்கும்  படம் 'உத்தம வில்லன்'.

கமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

அனுஷ்காவை ஹீரோயின் ஆக்கலாம் என்றுதான் முதலில் படக்குழு திட்டமிட்டது.

சரித்திரப் பின்னணியில் உருவாகும் தெலுங்குப் படங்களில் அனுஷ்கா  பிஸியாக இருப்பதால், காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முயற்சித்தனர்.

தெலுங்கில் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதில்லை. தமிழில் நடித்தால் தெலுங்கில் பிரச்னை எழும் என்று சொல்லி மறுத்துவிட்டார்.

அதற்குப் பிறகு, லிங்குசாமி காஜலிடம் பேச, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று காஜல் ஒப்புக்கொண்டார்.

உண்மையில் , காஜல் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் சம்பளம்தானாம்.லிங்குசாமி 2 கோடி சம்பளம் தருவதாக சொன்னதும், காஜல் கமலுடன் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close