விஷாலுக்கு ஜோடியாகிறாரா ஸ்ருதிஹாசன்? | ஸ்ருதி, விஷால், shruthi, vishal

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (26/12/2013)

கடைசி தொடர்பு:16:34 (26/12/2013)

விஷாலுக்கு ஜோடியாகிறாரா ஸ்ருதிஹாசன்?

'பாண்டிய நாடு' வெற்றிக்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. திரு இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

விஷால் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைத் தயாரிக்கிறார்.

இதற்கடுத்து, ஹரி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

பெயரிடப்படாத இப்புதுப்படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாம். ஸ்ருதியும் ஓ.கே சொல்லிவிட்டாராம்.

ஸ்ருதிக்காக ஒரு கதையை விஷால் தயார் செய்திருக்கிறார். விஷால் இயக்குநர் அடையாளம் பெறும்போது இக்கதையைத்தான் முதலில் படமாக எடுப்பாராம்.

இப்போதைக்கு விஷால் நடிக்கும் ஹரி படத்தில் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்