ஷங்கர் இயக்கத்தில் மம்முட்டி? | ஷங்கர், மம்முட்டி, shankar, mammootty

வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (31/12/2013)

கடைசி தொடர்பு:15:41 (31/12/2013)

ஷங்கர் இயக்கத்தில் மம்முட்டி?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 'ஐ' படம் முடித்த பிறகு, சரித்திரக் கதையைக் கையில் எடுக்கப் போகிறாராம்.

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் 'ஐ'.

விக்ரமின் சினிமா வாழ்வில் மறக்க முடியாத படமாக 'ஐ' இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் எடையைக் குறைத்தபடி ஸ்லிம்மாக இருக்கும் விக்ரம் ஸ்டில்கள் படத்தின் பல்ஸை அதிகரிக்கின்றன.

'ஐ' படம் முடிந்த பிறகு, ரஜினியை வைத்து ஷங்கர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. இப்போது,  சரித்திரக்கதையை எடுக்க ஷங்கர் விரும்புகிறாராம்.

அதுவும் மகாபாரதக் கர்ணன் கதையை படமாக்கப் போகிறாராம். கர்ணன் கேரக்டருக்கு மம்முட்டி தான் சரியாக இருப்பார் என்று நினைத்த ஷங்கர், மம்முட்டியிடம் ஓ.கே வாங்கிவிடடராம்.

ஷங்கர் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் கர்ணன் படம் வெளிவரும் என்றால் அதில் பிரம்மாண்டத்துக்குப் பஞ்சம் இருக்காது.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்