ஆப்ரேஷனைத் தள்ளிப்போடுகிறாரா அஜித்? | ajith, அஜித்

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (07/01/2014)

கடைசி தொடர்பு:17:56 (07/01/2014)

ஆப்ரேஷனைத் தள்ளிப்போடுகிறாரா அஜித்?

'ஆரம்பம்' படத்தின் ஷூட்டிங் நடந்தபோது கார் சேஸிங் காட்சியில் அஜித் நடித்தார்.

அப்போது ஓடும் காரின் முன்பக்கத்தில் நின்றபடி அஜித் மோதும் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.

அதில், அஜித்தின் கால் முன்பக்க கார் சக்கரத்தில் சிக்கி, கால் எலும்பில் காயம் ஏற்பட்டது.

அதற்காக ஆப்ரேஷன் செய்துகொள்ளுமாறு டாக்டர்கள் அஜித்துக்கு அறிவுறுத்தினர்.

'வீரம்' படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்படும் என்பதால் அப்போது அஜித் ஆப்ரேஷன் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

இப்போது 'வீரம்' ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது ஆப்ரேஷன் செய்துகொண்டால் அஜித் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்.

ஆனால், கௌதம் மேனன் படத்தில் பிப்ரவரியில் இருந்து நடிப்பதாக அஜித்தே உறுதி கொடுத்திருக்கிறார்.

இதனால், அஜித்தின் ஆப்ரேஷன் இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போகும் என்று சொல்லப்படுகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close