உலக வாரிசு நடிகையின் பனிப்போர்!

 

இந்தியிலும் தெலுங்கிலும் உலக வாரிசு நடிகைக்கும் பளிச் நடிகைக்கும் இடையில் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதில் பனிப்போரே நடக்கிறதாம்!

மதுரைக்காரர் மகனின் படத்துக்குப் பூ நடிகை வாழ்த்துச் சொன்னதால் தளபதி தரப்பு, கோபத்தில் இருக்கிறதாம். வரும் தேர்தலில் ஓரம் கட்டப்படுவார் என்கிறார்கள்!

கப்பல் கட்சித் தலைவர் தன் மகன் நடிக்கும் படத்தில் அரசாங்கத்தைக் கிண்டல் செய்து பல காமெடி காட்சிகள் வைக்கச் சொல்லியுள்ளாராம். படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்கள்தான் பீதியில் இருக்கிறார்கள்!

காதலியைச் சமாதானம் செய்ய அமெரிக்கா சென்ற விரல் நடிகருக்குத் தோல்விதான் மிஞ்சியதாம். மனிதர் நொந்துபோய் திரும்பிவிட்டார்!

பிரியமான நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில், ஒளிப்பதிவாளர், சண்டைப் பயிற்சியாளர், நடனப் பயிற்சியாளர் என எல்லோரிடமும் ஜாலியாகப் பேசுவதால் இதை அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு சில பேர் இரவில் கதவைத் தட்டுகிறார்களாம். தேவையா இது என அடக்கி வாசிக்க முடிவு செய்துவிட்டாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!