ஒரே படத்தில் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா? | சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா, simbu, hansika, nayanthara

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (05/02/2014)

கடைசி தொடர்பு:13:13 (05/02/2014)

ஒரே படத்தில் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா?

'இது நம்ம ஆளு' படம் ஆரம்பத்ததில் இருந்து ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
 
சிம்பு நடிப்பில், டி. ராஜேந்தர் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இது நம்ம ஆளு'. படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங்கில்தான் அடுத்த பரபரப்பு இருக்கிறது.
 
படத்தில் திடீரென்று நயன்தாரா கமிட்டாகி படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்ததைப்போல அடுத்த அதிரடி இருக்கிறது.சரி இப்போ கதைப்படி சிம்புவின் முதல் காதல் தோற்றுவிடும்.

காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று திரியும் சிம்புவுக்கு பெற்றவர்கள் நயன்தாராவைப் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விடுவார்கள்.

ஆறு  மாதத்துக்கு பிறகுதான் கல்யாணம். அதுக்குள்ள லவ் பண்ணிக்குங்க என்பதுதான் பெற்றவர்களின் கண்டிஷன்.

அவர்களுக்கு லவ் வந்துச்சா வரலையா? கதைப்படி சிம்புவின் முதல் காதலி யார்? அதாவது முதல் காதலியாக நடிப்பவர் யார் என்பது?தான் ட்விஸ்ட்.

அந்த கேரக்டரை நயன்தாரா அளவுக்கு பவர்புல்லான ஒரு ஹீரோயின் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் ஹன்சிகா மோத்வானியை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close