அஜித் படத்தில் அனுஷ்கா இல்லையா? | அஜித், அனுஷ்கா, கௌதம் மேனன், ajith, anushka, gautham menon

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (19/02/2014)

கடைசி தொடர்பு:16:30 (19/02/2014)

அஜித் படத்தில் அனுஷ்கா இல்லையா?

கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிலேயே பழியாகக் கிடக்கிறார் அஜித்.

மார்ச் மூன்றாம் வாரத்திற்குள் ஷூட்டிங் நடத்த கௌதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார். இந்நிலையில், அனுஷ்காவால் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறாராம்.

'ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களில் பிஸியாக இருப்பதோடு, சண்டைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதால் அனுஷ்கா இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறாராம். 

ஆனால், அஜித் படத்தில் கொஞ்சம் இளமையாகத் தெரிய வேண்டும் என்பதால், அனுஷ்கா இதில் நடிப்பாரா? கௌதம் மேனன் அதுவரைக்கும் காத்திருப்பாரா? என்பது தெரியவில்லை.

'வீரம்' படத்தில் அஜித்துடன் நடிக்க அனுஷ்காவைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தனர். கால்ஷீட் பிரச்னையால் அனுஷ்கா நடிக்க முடியவில்லை. இப்போதும் அதே சிக்கல் வந்திருக்கிறது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close