ஷகிலா கேரக்டரில் அஞ்சலி?

நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'தி டர்டி பிக்சர்' படம் வெற்றிகரமாக ஓடியது. வித்யாபாலனுக்கு  விருதும் கிடைத்தது.

இதே போல, 'ஒரு நடிகையின் வாக்குமூலம்', 'ஒரு நடிகையின் கதை' படங்களும் வெளிவந்தன. 

இப்போது ஷகிலாவின் வாழ்க்கை படமாக இருக்கிறது. ஷகிலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வைத்துள்ளார்.

சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகள், படங்களில் நிகழ்த்திய சாதனைகள் தன்னை ஏமாற்றியவர்கள் பற்றிய விவரங்கள் போன்ற விஷயங்களையும் சுயசரிதையில் குறிப்பட்டு உள்ளார். இதில் இருக்கும் முக்கிய சம்பவங்களை வைத்து படமாக உருவாக்கப்போகிறார்கள்.

சில்க் ஸ்மிதா படம் போல் ஷகிலா வாழ்க்கை கதை படமும் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இதைப் படமாக  எடுக்கின்றனர்.

இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது. அஞ்சலியும் இதில் நடிக்க விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!