வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (07/03/2014)

கடைசி தொடர்பு:14:15 (07/03/2014)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்?

கலர்ஸ் டிவியின் ஹிட் தொடர் 'பிக் பாஸ்'. பாலிவுட் பிரபலங்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் பாகத்தினை 'சல்மான் கான்' தொகுத்து வழங்கினார்.

தற்போது அதன் 8ம் பாகத்தினை தொகுத்து வழங்கப்போவது 'ஷாரூக்கான்' என வெளியாகியிருக்கும் தகவலே இப்போதைய பாலிவுட் பரபரப்பு!

ஷாரூக்‍‍ - சல்மான் இடையே நிலவும் போட்டிக்கிடையே இந்த செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவிர இதற்கு முன் பலமுறை அந்த நிகழ்ச்சியில் சல்மான்  நடந்து கொண்ட விதமும் இந்த மாற்றத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.

ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், ஹிருத்திக் ரோஷன் என பல பிரபலங்கள் சல்மானிற்கு மாற்றாக வருவார்கள் என கூறப்பட்டு இப்போது ஷாரூக்கான் தான் அந்த இடத்தை நிரப்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தொடரின் எட்டாம் பாகம் யாருக்கு எட்டும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்