மகேஷ்பாபுவை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்? | Mahesh babu, A.R.Murugadoss, மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (14/03/2014)

கடைசி தொடர்பு:13:52 (14/03/2014)

மகேஷ்பாபுவை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

தமிழில் 'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யை இயக்கிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சமந்தா, சதீஷ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

விஜய்யின் படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்குப் படத்தை இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.

ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் 'ஸ்டாலின்' திரைப்படத்தை இயக்கினார்.

இப்போது மகேஷ்பாபுவை வைத்து தெலுங்குப் படம் இயக்க இருக்கிறார். இது நேரடித் தெலுங்குப் படமா? அல்லது இதற்கு முன் எடுத்த தமிழ்ப்படத்தின் ரீமேக்கா? என்பது தெரியவில்லை.

விஜய்யின் படம் ரிலீஸான பின்புதான் தெலுங்குப் படம் குறித்த மற்ற விவரங்கள் தெரியவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close