இரட்டை வேடங்களில் அஜித்? | அஜித், கௌதம் மேனன், ajith , thala, gautham menon, தல

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (17/03/2014)

கடைசி தொடர்பு:11:00 (17/03/2014)

இரட்டை வேடங்களில் அஜித்?

கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. அஜித் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்து கொஞ்சம் ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

சிக்ஸ் பேக் போல எய்ட் பேக்கில் அசத்தப் போகிறார் அஜித். ஏற்கனவே 'ஆஞ்சநேயா', 'கிரீடம்' படங்களில் அஜித் போலீஸாக நடித்திருக்கிறார்.

ஆனால், அந்தப் படங்களில் இல்லாத ஸ்டைல், லுக், கம்பீரம் கௌதம் மேனன் படத்தில் இருக்குமாம்.

அஜித் இதில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கப் போகிறாராம். 'வாலி', 'வில்லன்', 'அட்டகாசம்', 'அசல்' போன்ற படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக படத்தை முடிக்க வேண்டும் என்று கௌதம் மேனன்  தீவிரமாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close