வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (19/03/2014)

கடைசி தொடர்பு:15:37 (19/03/2014)

பாலாவின் 'தாரை தப்பட்டை'?

'பரதேசி' படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவின் 1000வது படமாகும்.

இதுவரை தலைப்பிடாத இந்தப் படத்திற்கு இப்போது 'தாரை தப்பட்டை' என தலைப்பு முடிவு செய்துள்ளதாம் பாலா தரப்பு. இது தான் படத்தின் தலைப்பா? என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்