வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (19/03/2014)

கடைசி தொடர்பு:16:12 (19/03/2014)

'ஆரண்யகாண்டம்' தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படம்!

'ஆரண்யகாண்டம்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. பல ரசிகர்களையும், விருதுகளையும் ஒரு சேரக் குவித்தது இப்படம். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

அதற்குப் பிறகு, தமிழில் கிட்டத்தட்ட மூன்று வருடமாக படம் ஏதும் இயக்காமல் இருந்தார் குமாரராஜா.

தற்போது, மீண்டும் தமிழில் படம் இயக்க களமிறங்கி இருக்கிறார். அதுவும் இவர் இயக்கப்போவது பிரபல மலையாள நாயகன் ஒருவரை.

'அன்னாயும் ரசூலும்', '5 சுந்தரிகள்', 'நார்த் 24காதம்', '22ஃபீமேல் கோட்டையம்' போன்ற பல மலையாள வெற்றிப்படங்களில் நடித்த ஃபஹத் ஃபாசில் தான் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த தமிழ்ப் பட ஹீரோ.

ஃபஹத் ஃபாசிலுடன் தியாகராஜன் குமாரராஜா கைகோர்த்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்