சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான தமன்னா? | Rajini Murugan, Sivakarthikeyan,Thamanna, Ponram, ரஜினி முருகன், சிவகார்த்திகேயன், தமன்னா, பொன்ராம்

வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (20/03/2014)

கடைசி தொடர்பு:19:27 (20/03/2014)

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான தமன்னா?

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் 'ரஜினி முருகன்'. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.

சமீபத்தில் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா நடந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் 'எதிர்நீச்சல்' பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் 'டாணா' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

'டாணா' படம் முடிந்ததும் 'ரஜினி முருகன்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம். இதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close