வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் - 2? | VVS Prat 2, Sivakarthikeyan, வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2, சிவகார்த்திகேயன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (21/03/2014)

கடைசி தொடர்பு:12:16 (21/03/2014)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் - 2?

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வருவது தற்போது அதிகரித்துள்ளது. 'சிங்கம்-2', 'பீட்சா-2' வில் ஆரம்பித்தது 'விஸ்வரூபம்-2', 'ஜெய்ஹிந்த்-2' என இரண்டாம் பாகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்து வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ஆர்யா, நயன்தாராவுடன் தமன்னாவும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்து வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவில்லையாம், அவருக்கு பதிலாக ஆண்ட்ரியா அல்லது ப்ரியா ஆனந்த் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close