யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடும் விஷால்? | Yuvan Shankar Raja, Vishal, Shruthi Hassan, Hari, யுவன் ஷங்கர் ராஜா, விஷால், ஸ்ருதிஹாசன், ஹரி

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (25/03/2014)

கடைசி தொடர்பு:12:55 (25/03/2014)

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடும் விஷால்?

'பாண்டியநாடு' படத்தைத் தொடர்ந்து விஷால் தயாரித்து நடிக்கும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இசையும் டிரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

'பாண்டியநாடு' படத்தைப் போலவே 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் வெளியீட்டைப் பற்றி படப்பிடிப்பு துவங்கியபோதே தெரிவித்து ஏப்ரல் 11ல் ரிலீஸ் செய்யப்போகிறார் விஷால்.

அதற்கடுத்து, ஏப்ரல் 14ல் ஹரி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பையும்  தொடங்கவிருக்கிறார்.

இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அடுத்தடுத்து பல படங்களில் பாடிவரும் ஸ்ருதிஹாசன் குரலுக்கேற்ப ஒரு டியூனை தயார் செய்து வைத்திருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா.

இதில் விஷாலும் ஒரு பாடல் பாடவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'மத கஜ ராஜா' படத்தில் மை டியர் லவ்வரு எனும் பாடலை விஷால் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close