வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (27/03/2014)

கடைசி தொடர்பு:13:07 (27/03/2014)

'ராஜா வேஷம்' கட்டும் சீயான்?

'தேவதையை கண்டேன்', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'மலைக்கோட்டை', 'காதல் சொல்ல வந்தேன்', 'பட்டத்துயானை' போன்ற படங்களை இயக்கியவர் பூபதி பாண்டியன். இவர் தற்போது விக்ரமின் அடுத்த படத்தை இயக்கவுள்ளாராம்.

'ஐ' படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். அதில் பூபதிபாண்டியன் இயக்கும் 'ராஜா வேஷம்' படமும் ஒன்று.

'ராஜா வேஷம்' படத்தினை முன்பே இயக்கத் திட்டமிட்டிருந்தார் பூபதி பாண்டியன். ஆனால் சில காரணங்களுக்காக தள்ளிப்போனதாம்.

தற்போது படத்தை இயக்கத் தயாராக இருப்பதால், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம். தன் முந்தைய படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்ததைப்போல இப்படத்திலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்