'கத்தி' பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது? | Kaththi, Vijay, Samantha, ARMurugadoss, கத்தி, விஜய், சமந்தா, ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (29/03/2014)

கடைசி தொடர்பு:16:25 (29/03/2014)

'கத்தி' பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படத்தின் பெயர் 'கத்தி' தான் என உறுதியாகிவிட்டது. படத்தின் தலைப்பு தெரிந்த பின்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? என திசைமாறியுள்ளது.

இயக்குநர் தரப்பில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ல் வெளியாவதாக சொல்லப்படுகிறதாம். தலைப்பு வெளியானதும் ரசிகர்கள் விதவிதமாக படத்தின் பெயரை வடிவமைத்து இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

'கத்தி' பட பாடல் காட்சி படமாக்கப்படும்போது விஜய்யின் நடனத் திறமையைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டாராம் சமந்தா என ஷூட்டிங் ஸ்பாட் தகவல்கள் தற்போது ரசிகர்களுக்குத் தீனியாகிவரும் நேரத்தில், எதிர்பார்ப்பின் படி ஏப்ரல் 14ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியானால், ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அனிருத் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

படத்தின் டீஸர் சுதந்திரதினத்தன்று வெளியாகிறதாம். அதே நாளில் 'அஞ்சான்' படம் ரீலிஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close