ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்? | Ajith, Aishwaryarai, Shankar, அஜித், ஐஸ்வர்யாராய், ஷங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (31/03/2014)

கடைசி தொடர்பு:18:05 (31/03/2014)

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த 'வீரம்' படத்தை அடுத்து அஜித் தற்போது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அஜித்திற்கு ஷங்கர் தன்னை சந்திக்க வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமான ஒரு சந்திப்புதான் என நினைத்து ஷங்கரை சந்திக்கச் சென்றார் அஜித்.

அந்த சந்திப்பின் போது, அஜித்திடம் ஒரு கதையைப் பற்றி ஷங்கர் சொல்லியிருக்கிறார். உடனடியாக அஜித் அக்கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இப்படத்தில் அஜித் நடிக்க காரணம் அது ஷங்கர் படம் என்பதற்காக மட்டுமல்ல, கதாநாயகியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார் என்பதற்காகவும் தான் என சொல்லப்படுகிறது.

படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாம். அது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யாராய்க்கும் இரட்டை வேடமாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close