மீண்டும் நடிக்கும் விஜயகாந்த்?

 'செந்தூரப்பாண்டி' படத்தில் விஜயகாந்தும், விஜய்யும் இணைந்து நடித்தார்கள்.  அதே போல 'பெரியண்ணா' படத்தில் விஜயகாந்த், சூர்யா இணைந்து  நடித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படங்கள் வெற்றி பெற்றதற்கு விஜயகாந்த் இந்தப் படங்களில் நடித்தது முக்கியக் காரணமாக அமைந்தது.

தற்போது 'சகாப்தம்' எனும் படம் மூலம் தனது மகன் சண்முகப்பாண்டியனை கதாநாயகனாக களம் இறக்கும் விஜயகாந்த், அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் இருக்கிறார்.

கடைசியாக 'விருதகிரி' படத்தை இயக்கி நடித்த விஜயகாந்த் அதன் பின்பு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் நடிக்காமல் இருந்தார்.

இப்போது தன் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதனால், பஞ்ச் வசனங்களை பலமானதாக உருவாக்கி வருகிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!