அஞ்சான் படத்தில் கரீனா கபூர்! | Anjaan, KareenaKapoor, Surya, Lingusami, அஞ்சான், கரீனாகபூர், சூர்யா, லிங்குசாமி

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (03/04/2014)

கடைசி தொடர்பு:15:14 (03/04/2014)

அஞ்சான் படத்தில் கரீனா கபூர்!

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கிவரும் படம் 'அஞ்சான்'. இப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருகிறது. ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். 

இப்போது மேலும் ஒரு பாலிவுட் நடிகை இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அது வேறு யாருமல்ல கரீனா கபூர் தான்.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் கரீனா கபூர். தீபிகா படுகோன், கரீனா கபூர் என அடுத்தடுத்து இந்தி ஹீரோயின்கள் தமிழில் நடிப்பது தொடர்கிறது.

இதைப் பார்த்து மற்ற பாலிவுட் நடிகைகளும் தமிழுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பில் இருக்கிறது கோலிவுட் வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close