விஜய்யுடன் ஜோடி சேரும் தீபிகா படுகோனே? | Vijay, DheepikaPadkone, ARRahman, ChimbuDevan, விஜய், தீபிகா படுகோனே, ஏ.ஆர்.ரஹ்மான், சிம்புதேவன்

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (03/04/2014)

கடைசி தொடர்பு:16:41 (03/04/2014)

விஜய்யுடன் ஜோடி சேரும் தீபிகா படுகோனே?

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'கத்தி' படத்தில் நடித்துவருகிறார் விஜய். சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்குப் பின்பு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறாராம். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

தீபிகா படுகோனே ஏற்கனவே ரஜினியுடன் 'கோச்சடையான்' படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷாரூக்கானுக்கு ஜோடியாக 'ஹேப்பி நியூ இயர் படத்தில் பிஸியாக இருக்கிறார் தீபிகா. இதன்பிறகு விஜய்யுடன் இணைவாராம்.

ஆனால், இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 'கத்தி' படம் வெளியான பிறகுதான் விஜய்யின் அடுத்த படம் பற்றிய தெளிவான தகவல்கள் வெளிவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close