வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (09/04/2014)

கடைசி தொடர்பு:16:56 (09/04/2014)

ஜெய் - ஆண்ட்ரியா நடிக்கும் வலியவன்?

'இவன் வேற மாதிரி' படத்திற்குப் பிறகு சரவணன் இயக்கும் புதிய படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு 'சூதுகவ்வும்' பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறாராம். படத்திற்கு 'வலியவன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம்.

ஆக்‌ஷன் கலந்த ரொமான்ஸ் கதையாக உருவாகப்போகிறதாம் 'வலியவன்'. ஜெய் நடிப்பில் 'திருமணம் எனும் நிக்காஹ்', 'வடகறி' என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்