செல்வராகவனின் அலைவரிசை? | Alaivarisai, Selvaragavan, Simbu, Trisha, Yuvanshankarraja, அலைவரிசை, செல்வராகவன், சிம்பு, த்ரிஷா, யுவன்ஷங்கர்ராஜா

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (09/04/2014)

கடைசி தொடர்பு:17:47 (09/04/2014)

செல்வராகவனின் அலைவரிசை?

'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு,த்ரிஷா நடிக்கின்றனர். 'விண்ணைத் தாண்டி வருவாயா' வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் செல்வராகவன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் வசனங்களை ஜெயமோகன் எழுதப்போவதாக பேசப்படுகிறது. ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

காதல் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் தேதி துவங்குகிறது. இப்படத்திற்கு 'அலைவரிசை' பெயரிடப்பட்டுள்ளதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close