'ஐ' பட இசைவெளியீட்டு விழாவில் அர்னால்டு ? | Ai, Vikram, Amy jackson, Arnold Schwarznegger, ARRahman, PCSriram, ஐ, விக்ரம், எமி ஜாக்சன், அர்னால்டு ஸ்வாஸ்நேகர், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம்

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (09/04/2014)

கடைசி தொடர்பு:18:51 (09/04/2014)

'ஐ' பட இசைவெளியீட்டு விழாவில் அர்னால்டு ?

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் படம் 'ஐ'. இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஏறக்குறைய படம் முடிந்துவிட்ட தருவாயிலும் இன்னும் படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். எனவே இவ்விழாவில் ஹாலிவுட் பிரபலங்கள் பங்கு பெறச்செய்யலாமா என யோசித்து வருகிறார்களாம்.

ஹாலிவுட் பிரபலமான 'டெர்மினேட்டர்', 'பிரிடேட்டர்' போன்ற பல படங்களில் நடித்த அர்னால்டு ஸ்வாஸ்நேகரை பங்கு பெறவைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்