வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (10/04/2014)

கடைசி தொடர்பு:13:06 (10/04/2014)

'ஸ்பெஷல்26' ரீமேக்கில் விக்ரம்?

அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கி இந்தியில் வெளியான படம் 'ஸ்பெஷல்26'. இப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.

வருமான வரி சோதனை அதிகாரி என ஏமாற்றி கொள்ளையடிப்பதே படத்தின் கதை. இப்போது விக்ரம் 'ஐ' படத்தை முடித்துவிட்டதால் அடுத்த படத்திற்காக கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் 'ஸ்பெஷல்26' படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜூம் நடிக்க உள்ளாராம்.

தமிழ் ரசிகர்களுக்கேற்ப சில மாற்றங்களுடன் ரீமேக் ஆக இருக்கிறதாம் 'ஸ்பெஷல்26'. இப்படத்தை இயக்கப்போவது யார், தொழிநுட்பக் கலைஞர்கள் யார் என இன்னும் தெரியவில்லை.

விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமாம். இதற்கு முன் நீரஜ் பாண்டே இந்தியில் இயக்கிய 'ஏ வெட்னஸ் டே' படம் தமிழில் 'உன்னைப் போல் ஒருவன்' என ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்