ரஜினி படத்தில் அனிருத்? | Anirudh, Rajini, ARRahman, அனிருத், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான்

வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (10/04/2014)

கடைசி தொடர்பு:16:16 (10/04/2014)

ரஜினி படத்தில் அனிருத்?

'கோச்சடையான்' படத்திற்குப் பிறகு ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி.

ரஜினியின் படம் என்றால் இசையமைப்பாளராக ரஹ்மான் மட்டுமே முதல் தேர்வாக இருப்பார். ஆனால் இப்போது ரஹ்மான் ஹாலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த பட ஒப்பந்தங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் இசையமைக்க இயலவில்லை.

எனவே, ரஜினியின் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்தை நோக்கித் திரும்பியுள்ளது. அனிருத் நடிக்கலாம் என முடிவு செய்தபோது, உனக்கு இசையில் நிறைய திறமை இருக்கிறது கவனத்தை திசைதிருப்பாதே என அறிவுரை கூறினார் ரஜினி.

இப்போது, அவரின் படத்திற்கே இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் அனிருத். அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஹீரோயின்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்போது இக்கூட்டணியில் அனிருத்தும் இணைந்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close