அஜித், சூர்யா, தனுஷை இயக்க விரும்பும் ஷங்கர்! | Shankar, Vikaram, Ai, Surya, Anirudh, Dhanush, Ajith, ஷங்கர், விக்ரம், ஐ, சூர்யா, அனிருத், தனுஷ், அஜித்

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (18/04/2014)

கடைசி தொடர்பு:12:32 (18/04/2014)

அஜித், சூர்யா, தனுஷை இயக்க விரும்பும் ஷங்கர்!

விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கி கொண்டிருக்கும் படம் 'ஐ'. பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பிலும் இடம்பிடித்துவிட்டது.

இப்படத்தைப் பற்றிய பேட்டி ஒன்றில் வேறு ஒரு சுவாரஸ்யமான தகவலையும் கூறியிருக்கிறார் ஷங்கர். "தமிழில் திறமையான நடிகர்களையும் இயக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

சூர்யா, தனுஷ், அஜித்குமார் ஆகியோருடனும் இணையும் விருப்பம் உள்ளது. சூர்யாவுடன் ஏற்கெனவே இணைய வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அது முடியவில்லை. கண்டிப்பாக அதற்கான நேரம் வரும்.

இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் அனிருத்தின் இசை என்னை மிகவும் கவர்கிறது.

பல படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்திருக்கிறேன், ஹாரிஸ் ஜெயராஜூடனும் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களில் அனிருத்துடன் இணைந்து பணிபுரிய விருப்பம் உள்ளது" என தெரிவித்திருக்கிறார் ஷங்கர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close