ஆறு கோடி சம்பளம் வாங்குகிறாரா சுதீப்?

'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் உற்சாகத்தில் இருக்கிறார் சிம்புதேவன்.

அடுத்து விஜய் படம் என்பதால் படத்தின் டீமையும், பட்ஜெட்டையும் பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கிறார்.

விஜய் நடிக்கும் 58வது படம் இது. இப்படத்தை பி.டி. செல்வகுமார், தமீன்ஸ் ஃபிலிம் பேனருடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

மயிலு ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் ஸ்ரீதேவி.
'நான் ஈ' படத்தில் வில்லத்தனம் செய்த சுதீப் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். இதற்காக சுதீப்புக்கு ஆறு கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

சுதீப் கன்னடப் படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். 'மாங்கியா' கன்னடப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் சுதீப்புக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!