இயக்குநர் ஆகிறார் சி.வி.குமார்! | C.V.Kumar, சி.வி.குமார்

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (23/04/2014)

கடைசி தொடர்பு:18:57 (23/04/2014)

இயக்குநர் ஆகிறார் சி.வி.குமார்!

'அட்டகத்தி', 'பீட்சா', 'சூதுகவ்வும்', 'வில்லா', 'தெகிடி' போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது இவர் விஷ்ணு நடிக்கும் 'முண்டாசுப்பட்டி', சித்தார்த் நடிக்கும் 'லூசியா' பட தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான கதைக்களை தேர்வு செய்து தயாரிக்கும் இவர், தற்போது இயக்குநராகவும் களமிறங்க உள்ளார். கதையைத் தேர்ந்தெடுப்பதில் இவர் காட்டும் ஆர்வமும், அதற்குத் தேவையான விதத்தில் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதிலும் அனுபவம் இருக்கும் இவருக்குள் கண்டிப்பாக ஒரு இயக்குநர் இருக்கிறார், என இவரின் நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்களாம்.

அதன் விளைவே இப்போது சி.வி.குமார் இயக்குநராகக் களம் இறங்குகிறார். ஹீரோ, ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாரும் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இது பற்றிய அறிவுப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close