வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (26/04/2014)

கடைசி தொடர்பு:17:23 (26/04/2014)

ஃபஹத் பாசிலும், ப்ருத்விராஜும் இணையும் ஆங்கிலப் படம்!

மலையாள சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஃபஹத் பாசில், ப்ருத்விராஜ். இருவரும் மலையாளத்தில் தனக்கென தனி  ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ப்ருத்விராஜ் நடித்திருக்கும் 'செவன்த் டே' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஃபஹத் பாசில் நடித்து வெளியான 'ஒன் பை டூ' படமும் வெளியாகி நல்ல விமர்சனங்களை வெற்று வருகிறது.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்களாம். இந்தப்படம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் தயாராக இருக்கிறதாம்.

மேலும் இப்படம் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டதாம். இருவரும் தனித்தனியே பல த்ரில்லர் படங்களில்  நடித்து வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இணைந்து நடிக்கும் த்ரில்லர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்