ரஜினி படத்தின் பெயர் 'லிங்கா?'

'கோச்சடையான்' ரிலீஸுக்குப் பிறகு ரஜினி கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு பொன்.குமரன் கதை எழுதுகிறார்.

இந்நிலையில் படத்தின் தலைப்பு 'லிங்கா' என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும் இத்தலைப்பை கே.எஸ்.ரவிகுமார் கில்டிலும் பதிவு செய்துவிட்டாராம்.

இப்படத்தில் தந்தை மகன் என ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹாவும், மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது.

இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். மே 2 முதல் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்குகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

 மேலும், சினிமா குறித்த உடனடி செய்திகளுக்கு சினிமா விகடன் facebook மற்றும் twitter ல் இணைந்திடுங்கள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!