சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணிமீண்டும் இணைகிறதா ? | சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சிம்பு, sivakarthikeyan, paandiraj, simbu

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (20/05/2014)

கடைசி தொடர்பு:16:47 (20/05/2014)

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணிமீண்டும் இணைகிறதா ?

மீண்டும் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி இணையப் போகிறதாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது.

'மெரினா' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். அதற்குப்பிறகு எழில் இயக்கிய 'மனம் கொத்தி பறவை' படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.

பாண்டிராஜ், விமல்- சிவகார்த்திகேயனை வைத்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சிவகார்த்திகேயன் மார்க்கெட் அந்தஸ்து பெற்ற நடிகராக உயர்ந்தார். 

அதையடுத்து, 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே' படங்களில் நடித்தவர் இப்போது 'டாணா' படத்தில் நடிக்கிறார்.

பாண்டிராஜ் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் சிம்பு- நயன்தாராவை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிக் கொண்டே செல்வதால், இடையில் ஒரு படம் பண்ணிவிடலாமே என்ற யோசனையில் இருக்கிறாராம் பாண்டிராஜ்.

சிவகார்த்திகேயனுடன் இது குறித்துப் பேசினாராம். சிவாவும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close