தமிழில் நடிப்பாரா அலியாபட்? | Alia Bhatt, Vikram Prabhu, GNRKumaravelan, அலியாபட், விக்ரம்பிரபு, ஜி.என்.ஆர்.குமரவேலன்

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (26/05/2014)

கடைசி தொடர்பு:16:09 (26/05/2014)

தமிழில் நடிப்பாரா அலியாபட்?

இந்தியில் 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்', 'ஹைவே', '2 ஸ்டேட்ஸ்' படங்களில் நடித்ததின் மூலம் முன்னணி நாயகியாக இருப்பவர் அலியா பட்.

'யுவன் யுவதி',  'ஹரிதாஸ்' படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக  நடிக்க அலியா பட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இயக்குநர் தரப்பில் விசாரித்தோம்.  "பாலிவுட் நடிகையை இப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் . அலியா பட்டிடம் கேட்டுள்ளோம். விரைவில் நல்ல பதில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்கள்.

இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்காக அலியா பட்டை நடிக்க அழைத்தாகவும், அதற்கு அலியா பட் நடிக்க மறுத்ததாகவும் சொல்லப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close