வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (26/05/2014)

கடைசி தொடர்பு:16:16 (26/05/2014)

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா?

'சூதுகவ்வும்' படம் இயக்கிய நலன் குமரசாமி அடுத்த படம் இயக்கத் தயாராகிவிட்டார். இப்படத்திலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார்.படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

விஜய் சேதுபதியிடம் முழுக் கதையையும் சொன்ன, நலன் குமரசாமி ஹீரோயின் பெயரையும் சொல்லியிருக்கிறார். சூப்பர் ஜி! சூப்பர் ஜி! என்று சொன்ன விஜய் சேதுபதி, கதையில் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டாராம்.

ஹீரோயின் விஷயத்தில் மட்டும் விஜய் சேதுபதி சின்னதாய் ஒரு ஆலோசனை சொல்லி இருக்கிறாராம். இந்தக் கதையில் த்ரிஷா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல, நலன் குமரசாமியும் ஓ.கே சொல்லிவிட்டாராம்.

த்ரிஷா என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்