வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (26/05/2014)

கடைசி தொடர்பு:17:32 (26/05/2014)

விஜய்சேதுபதி படத்தைத் தயாரிக்கும் தனுஷ்?

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனுஷ் 'எதிர்நீச்சல்' படத்தைத் தயாரித்தார். அதற்கடுத்து 'காக்கா முட்டை', 'வேலையில்லா பட்டதாரி', 'டாணா' போன்ற படங்களையும் தயரித்துவருகிறார்.

தற்போது தனுஷ் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கப் போகிறாராம். இயக்குநர் உட்பட எந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இன்னும் முடிவாகவில்லை.

இப்படத்தை 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கலாம் என தெரிவிக்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால், இன்னும் இதைப் பற்றிய அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்