பிரஷாந்துடன் ஜோடி சேரும் நர்கீஸ் ஃபக்ரி! | Prashanth, Nargis Fakhri, Saahasam, பிரஷாந்த், நர்கீஸ் ஃபக்ரி, சாஹசம்

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (27/05/2014)

கடைசி தொடர்பு:14:55 (27/05/2014)

பிரஷாந்துடன் ஜோடி சேரும் நர்கீஸ் ஃபக்ரி!

'மம்பட்டியான்' படத்திற்குப் பிறகு பிரஷாந்த் நடிக்கும் படம் 'சாஹசம்'. இப்படத்தை அருண்ராஜ் வர்மா எனும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் மூலம் நடிகர் தியாகராஜன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் பிரஷாந்திற்கு ஜோடியாக நர்கீஸ் ஃபக்ரி நடிக்கிறார்.இந்தியில் 'ராக்ஸ்டார்', 'மெட்ராஸ் கஃபே', 'மெயின் தேரா ஹீரோ' போன்ற படங்களில் நடித்த நர்கீஸ் ஃபக்ரி 'சாஹசம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். இதை தனது ஃபேஸ் புக் பக்கத்திலும், இணையதளத்திலும் தெரிவித்திருக்கிறார் நடிகர் பிரஷாந்த்.

மேலும் பிரஷாந்துக்கு அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும், தங்கையாக லீமாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் தம்பிராமையா, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், சோனு சூட், கோட்டா சீனிவாசராவ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன், இலியானா நடிப்பில் திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய 'ஜூலாயி' படத்தின் ரீமேக் தான் 'சாஹசம்' என கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close