தமன்னாவுக்கும் , பிபாஷா பாசுவுக்கும் மோதலா? | தமன்னா, பிபாஷா பாசு, ஹம்சகல், thamanna, bipasha basu, hamsakal

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (27/05/2014)

கடைசி தொடர்பு:15:33 (27/05/2014)

தமன்னாவுக்கும் , பிபாஷா பாசுவுக்கும் மோதலா?

'ஹம்சகல்' இந்தி படப்பிடிப்பின்போது தமன்னாவுக்கும், பிபாஷா பாசுவுக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.  பிபாஷா பாசு தமன்னாவிடம் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவருக்கிடையில் மோதல் வெடித்துள்ளதாம்.  

தமிழில் 'வீரம்' படத்துக்குப் பிறகு பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் தமன்னா நடிக்கிறார். எம்.ராஜேஷ் இயக்க இருக்கும் இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் இந்தப் படம் மட்டுமே கைவசம் இருப்பதால் இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் தமன்னா.

'ஹம்சகல்' என்ற இந்திப் படத்தில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில் சயீப் அலிகான், ரித்தேஷ் தேஷ்முக் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். பிபாஷா பாசுவும் இப்படத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பில் தமன்னா நடிக்கும் ஈடுபாட்டைப் பார்த்து அசந்துபோன யூனிட்,  தமன்னா நடிக்க வேண்டிய காட்சிகளை அதிகப்படுத்தினார்களாம். தமன்னாவுக்கு தந்த இந்த மரியாதை பிபாசா பாசுவை கடுப்பேற்றிவிட்டதாம்.

இந்தியில் தமன்னாவைவிட நான்தான் பெரிய நடிகை. எனக்கு தான் முதல் மரியாதை வேண்டும் என்று சொன்னவர், தமன்னாவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதுவே தமன்னா, பிபாஷா பாசு மோதலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்