கார்த்திக்கு ஜோடியான லட்சுமி மேனன்? | karthi, komban, muthaiah, lakshmi menon, கார்த்தி, லட்சுமி மேனன், முத்தையா, கொம்பன்

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (28/05/2014)

கடைசி தொடர்பு:13:53 (28/05/2014)

கார்த்திக்கு ஜோடியான லட்சுமி மேனன்?

கார்த்தியின் அடுத்த படத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தை 'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.

'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில் 'மெட்ராஸ்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கேத்ரீன் தெரேசா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். வடசென்னையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையா படத்தில் நடிக்கிறார் கார்த்தி. படத்துக்கு 'கொம்பன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

'குட்டிப்புலி' படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனன் முத்தையாவின் இரண்டாவது படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறாராம். 'கொம்பன்' படத்தின் மூலம் கார்த்தியுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன். 

ராமநாதபுரத்தைச் சுற்றிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close