நயன்தாராவின் வாழ்க்கை படமாகிறதா? | நயன்தாரா, சிம்பு, த்ரிஷா, nayanthara, simbu, trisha

வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (03/06/2014)

கடைசி தொடர்பு:10:28 (03/06/2014)

நயன்தாராவின் வாழ்க்கை படமாகிறதா?

நடிகையின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது புதிதில்லை. அந்த வகையில் நயன்தாராவின் வாழ்க்கையையும் படமாக எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

நயன்தாராவின் பலம் அவரது தைரியம்தான். காதல் பிரிவில் இருந்து மீண்ட நயன் ரீ - என்ட் ரி ஆனது, நம்பர் ஒன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது, முன்னணி நடிகர்களுடன் நடிப்பது என மீண்டும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அதனால் தான் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், நயன்தாராவின் வாழ்க்கையை படமாக எடுக்க ஒரு புதுமுக இயக்குநர் ஆர்வமாய் இயங்கி வருகிறார். ஆனால், நயன்தாராவோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இப்போது சமீபத்தில் த்ரிஷாவின் பிறந்தநாள் விழாவில் சிம்புவுடன் நயன்தாரா நெருக்கமாக நின்று கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது. இதனால் மறுபடியும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளும் வந்தன.

இதைத் தொடர்ந்து இந்த நேரத்தில் நயன்தாராவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் புதுமுக இயக்குநர் நயன்தாராவை அணுகியுள்ளார். ஆனால் கோபம் கொண்ட நயன்தாரா 'என் வாழ்க்கையைப் படமாக எடுக்க வேண்டாம்' என்று மறுத்துவிட்டாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close