ப்ரணிதாவுக்கு சிபாரிசு செய்கிறாரா சமந்தா?

தெலுங்குப் படங்களில் செகண்ட் ஹீரோயின் கேரக்டர் என்றால் உடனே ப்ரணிதாவை நடிக்க வைக்க சிபாரிசு செய்கிறாராம் சமந்தா.

'உதயன்' படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்தவர் ப்ரணிதா. அதற்குப் பிறகு கார்த்தியுடன் 'சகுனி' படத்தில் நடித்தார். தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, கன்னடப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பவன் கல்யாண் நடித்த 'அத்தரின்ட்டிக்கி தாரிடி' தெலுங்குப் படத்தில் சமந்தா ஹீரோயினாகவும், ப்ரணிதா செகண்ட் ஹீரோயினாகவும் நடித்தனர். அப்போது இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர்.

இதனால் ஜூனியர் என்.டி. ஆருடன் சமந்தா நடிக்கும் 'ரபசா' படத்திலும் ப்ரணிதாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாராம் சமந்தா. இதையடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் சமந்தா நடிக்கும் படத்திலும் ப்ரணிதாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.

தான் நடிக்கும் படங்களில் மற்றொரு கதாபாத்திரம் இருக்கும்பட்சத்தில் அதை ப்ரணிதாவுக்கே தரவேண்டும் என்று சமந்தா சிபாரிசு செய்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!