வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (03/06/2014)

கடைசி தொடர்பு:15:02 (03/06/2014)

சைவம் ரிலீஸ் தேதி?

'தலைவா' படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் படம் 'சைவம்'. இப்படத்தில் சாரா, நாசர், கெளசல்யா, சுரேஷ், நாசரின் மகன் பாஷா உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். குடும்ப உறவுகளின் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சமீபத்தில் உதயநிதி பார்த்திருக்கிறார்.

உதயநிதிக்கு படம் மிகவும் பிடித்துப் போக தானே வாங்கி தன் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' மூலம் வெளியிடுகிறார். இப்படம் ஜூன் 27ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதற்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசப்பட்டினம்' படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்