தீபாவளிக்கு வெளிவருமா லிங்கா? | lingaa, rajinikanth, k.s.ravikumar, anushka, sonakshi sinha, santhanam , லிங்கா, ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம்

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (05/06/2014)

கடைசி தொடர்பு:11:18 (05/06/2014)

தீபாவளிக்கு வெளிவருமா லிங்கா?

கே.எஸ். ரவிகுமார் இயக்கும் 'லிங்கா' படத்தை தீபாவலியை ஒட்டி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

ரஜினிகாந்த் இரட்டை  வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'லிங்கா'. இதில்  சோனாக்ஷி சின்ஹா,  அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

 நயன்தாரா ஒரு பாடலுக்கு ரஜினியுடன் டான்ஸ் ஆடுகிறார். சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோர் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.
 
 
 ரஜினியுடன் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடித்திருக்கிறார். 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு விருவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.
 
விஜய் நடிக்கும் 'கத்தி', விஷால் நடிக்கும் 'பூஜை' , அஜித்- கௌதம் மேனன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close