அஜித்தை இயக்கும் முருகதாஸ்? | அஜித், ஏ.ஆர்.முருகதாஸ்,தல, ajith, murugadoss, thala,

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (05/06/2014)

கடைசி தொடர்பு:15:08 (05/06/2014)

அஜித்தை இயக்கும் முருகதாஸ்?

'தீனா' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று சொல்லப்படுகிறது.

முருகதாஸின் முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அஜித்தை தல என்று அன்போடு அழைத்தது 'தீனா' படத்தில்தான். இன்று வரைக்கும் அஜித் தல என்று அழைக்கப்படுகிறார்.

'தீனா' படத்தைத் தொடர்ந்து 'ரமணா', 'கஜினி', 'ஏழாம் அறிவு', 'துப்பாக்கி' படங்களை இயக்கிய முருகதாஸ் இப்போது 'கத்தி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

'கத்தி' படம் முடிந்த பிறகு மீண்டும் அஜித்தை இயக்க இருக்கிறாராம். இதுவரை சூர்யாவுக்கும், விஜய்க்கும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் அஜித்துக்கும் இரண்டாவது முறையாக படம் இயக்க உள்ளார். இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close