பிணையக் கைதிகளை காப்பாற்றும் விஜய்? | vijay,kaththi, a.r.murugadoss, samantha, anirudh, sathish, கத்தி, விஜய், சமந்தா, சதீஷ், அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (05/06/2014)

கடைசி தொடர்பு:17:17 (05/06/2014)

பிணையக் கைதிகளை காப்பாற்றும் விஜய்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'கத்தி'. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

90 பிணையக்  கைதிகள் தீவிரவாதிகளால் கடத்தப்படுகின்றனர். அந்த கடத்தல் கும்பலுக்கு விஜய் தான் தலைவராக இருக்கிறாராம். இந்த வில்லன் விஜய்யிடம் இருந்து ஹீரோ விஜய் பிணையக் கதைகளைக் காப்பாற்றுகிறாராம். இதுதான் கத்தி படத்தின் முக்கியமான போர்ஷன் என்று சொல்லப்படுகிறது.

இதனால் வில்லன் விஜய்யும், ஹீரோ விஜய்யும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ல் வெளியிடப்பட உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close