கொம்பன் படத்தில் ராஜ்கிரண்! | Komban, Karthi, LakshmiMenon, Rajkiran, Yuvan Shankar Raja, Muthaiah, கொம்பன்,கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், யுவன் ஷங்கர் ராஜா, முத்தையா

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (07/06/2014)

கடைசி தொடர்பு:14:39 (07/06/2014)

கொம்பன் படத்தில் ராஜ்கிரண்!

'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா அடுத்து இயக்கும் படம் 'கொம்பன்'. இப்படத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ராஜ்கிரணும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 'மஞ்சப்பை' படத்தில் விமலுக்குத் தாத்தாவாக நடித்து, தான் ஒரு ஃபெர்பார்மர் என்பதை ராஜ்கிரண் மீண்டும் நிரூபித்திருக்கிறார். இதனால் 'கொம்பன்' படத்தில் ராஜ்கிரண் கேரக்டர் பேசப்படும் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கொம்பன்' படத்தின் மூலம் மீண்டும் கார்த்தி படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கார்த்தி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'மெட்ராஸ்' படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.

அதையடுத்து விரைவில் 'கொம்பன்' படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close