வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (12/06/2014)

கடைசி தொடர்பு:12:38 (12/06/2014)

'பூச்சாண்டி' ஆன சூர்யா!

'சிங்கம்-2' படத்திற்குப் பிறகு சூர்யா லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ல் வெளிவருகிறது.

இதற்கடுத்து சூர்யா, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறாராம். தற்போது இப்படத்திற்கு 'பூச்சாண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கமான வெங்கட்பிரபு காமெடியுடன், திகில் கலந்த பேய் படம் தான் 'பூச்சாண்டி' என சொல்லப்படுகிறது. இதில் மைக் மோகனை வில்லனாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தகள் நடக்கிறதாம். ஆனால், இன்னும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்